தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு மாதம் முன்னதாக ஜூலை 2 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பொறியியல் கலந்தாய்வு
தமிழகத்தில் 12 ஆம் வகுக்கு தேர்வு முடிவு கடந்த 8 ஆம் தேதி வெளியானது. இதை போல சிபிஎஸ்சி மாணவர்களுக்கான தேர்வு முடிவும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் தங்களது மேல் வகுப்பிற்காக தேடுதல் பணியில் மேற்கொண்டு வருகின்றனர். இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மே 5 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது முன்கூட்டியே கலந்தாய்வு நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 2 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கடந்த முறை சி.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் தாமதம் மற்றும் நீட் தேர்வு முடிவுகள் தாமதமானதால் பொறியியல் கலந்தாய்வும் தாமதமாகத் துவங்கப்பட்டது.தற்போது முடிவுகள் விரைவாகவே வந்துவிட்டதால் ஜூலை 2 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்க இருப்பதாக கூறினார். முதலில் சிறப்பு பிரிவுனருக்கான கலந்தாய்வு நடக்கவுள்ள நிலையில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 7-ம் தேதி தொடங்க இருப்பதாக தெரிவித்தார். சிபிஎஸ்இ மற்றும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால் முன்னதாக கலந்தாய்வு நடைபெற இருப்பதாகவும் குறிப்பிட்டார். இதன் காரணமாக கலந்தாய்வு விரைவில் முடிக்கப்பட்டு முன்னதாகவே அதாவது செப்டம்பர் 3 ஆம் தேதி பொறியில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என தெரிவித்தார்.

மாணவர்கள் சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு
மேலும் பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர நாளை முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்தார். அதேபோல், கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மேலும் மூன்று நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும், வரும் திங்கட்கிழமை வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதன் காரணமாக சனி மற்றும் ஞாயிறு (20 மற்றும் 21 ஆகிய தேதிகள்) கல்லூரிகள் இயங்கும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யனும்..! ஆளுநரிடம் மனு அளிக்கும் அண்ணாமலை
