DMK Vs TVK Vijay: இந்நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பயிர் சேத இழப்பீடு, நெல் உற்பத்தி மற்றும் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மேட்டு தெருவில் அமைந்திருந்த காஞ்சிபுரம் மாநகர அலுவலகத்தை புதுப்பித்து புதிய கலைஞர் சிலையை நிறுவினர். அதனை இன்று காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் மாநகர திமுக அலுவலகம் மற்றும் கலைஞர் நூற்றாண்டு அரங்கத்தை, கலைஞர் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுந்தர் மற்றும் எழிலரசன் ஆகியோர் உடனிருந்தனர்
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்: பயிர்கள் சேதம் அடையவில்லை. தாழ்வான பள்ளங்களில் நெருப்பயிர்கள் சாய்ந்து உள்ளது 25 ஆயிரம் எக்டர் பயிர் சாய்ந்துள்ளது. இதில் 255 ஹெக்டர் நெற்பயிர்கள் 33 சதவீதம் ஈரப்பதத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஏற்றார் போல் இழப்பீடுகளை முதலமைச்சராக அறிவிப்பார்,
கடந்த ஆட்சி காலத்தை விட இந்த ஆட்சி காலத்தில் நெல்மணிகள் உற்பத்தி மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் 3 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி தற்பொழுது 9 லட்சம் மெட்ரிக் டன் நெல்மணிகள் உற்பத்தி ஆகி வருகிறது. தீபாவளி விடுமுறை வந்ததால் சிறிது பணிகள் தோய்வில் இருந்து தற்பொழுது எந்த பாதிப்பையும் இன்றி அனைத்தும் நெல்மணிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தவெக தலைவர் விஜய் முன்பு செட் அமைந்து நடித்தார். ஆனால் தற்போது அதே போன்று நடிக்கிறார். 100 கோடி 200 கோடி சம்பளம் வாங்கிய நடிகர் தற்பொழுது அரசியலுக்கு வருவதால் ஏதோ ஆதாயத்துடன் தான் வருகிறார். ஆனால் கொரோனா களத்தில் மக்களுடன் நின்று போராடி வந்தவர் திமுக தான். ஆட்சிக்கு வருவோம் என்று எதிர்பாராமல் எப்போதும் மக்களிடம் நிற்பது தான் திராவிட முன்னேற்ற கழகம் என கூறினார்.
