தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 16 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி தொடக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 16 ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3 ஆம் தேதி தொடக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் 10 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவியுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் வாரம்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி சனிக்கிழமை நடைபெறும் தடுப்பூசி முகாம் அடுத்த நாள் நடைபெறும் என்று சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. இதனடிப்படையில் இன்று தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

சென்னையை பொருத்தவரை 1600 இடங்களில் 16 வது கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இதே போல் அடுத்த வாரம் சனிக்கிழமை புத்தாண்டு என்பதால் அதற்கு மறுநாள் ஞாயிற்று கிழமை முகாம் நடைபெறும் என்றும் அதன் பின்னர் வழக்கம் போல் வாரம் தோறும் சனிகிழமைகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்துப்படும் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சியில் 89% பேருக்கு முதல் தவணையும் 66% பேருக்கும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 15 முதல் 18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சென்னையில் ஜனவரி 3 ஆம் தொடங்கப்படும் என்றும் சைதாப்பேட்டை பெண்கள் நகராட்சி பள்ளியில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் கட்டாயமாக 7 நாள் தனிமையில் இருக்க வேண்டும். ஒமைக்ரான் வேகமாக பரவும் என்பதால் நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாங்களை தவிர்க்கவேண்டும் எனவும் கூட்டமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.தமிழ்நாட்டில் இதுவரை புதுவகை ஒமைக்ரான் தொற்றினால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 12 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேற்றிரவு நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். ஜனவரி 3 ஆம் தேதி முதல் 15 -18 வயதினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும். சிறார்களுக்கு பள்ளி அல்லது முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். 60 வயதைக் கடந்தவர்கள்,இணை நோய்கள் உள்ள நபர்களும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தலாம். மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் இணை நோய் உள்ளோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்.
