நடந்தாலே மயக்கம் வருகிறது... அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து அமைச்சர் மா. சுப்ரமணியன்
அமைசசர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்றும் மன அழுத்தம் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை மற்றும் மருத்துவ சிகிச்சை பற்றிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
அமைசசர் செந்தில் பாலாஜிக்கு நடந்தாலே மயக்கம் வருகிறது என்றும் மன அழுத்தம் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தும் மருத்துவ சிகிச்சையில் நலமுடன் இருக்கிறார் எனக் கூறியிருக்கிறார்.
Bank Holidays: டிசம்பரில் வங்கிகள் 18 நாள் இயங்காது! பேங்கிங் வேலையை சீக்கிரம் முடிச்சுருங்க...
இந்நிலையில், இன்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 11வது முறையாக நீட்டித்து உத்தரவிட்டனர். இந்த முறை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட அமைச்சர் செய்தில் பாலாஜிக்கு நவம்பர் 14ஆம் தேதி இரவு முதல் உடல்நலக் கோளாறு அதிகமானது. அதிகமான கழுத்துவலியும், முகுதுவலியும் ஏற்ப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் நவம்பர் 16ஆம் தேதி அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.