டிடிவி தினகரன் இன்று அம்மா மக்கள் முனேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி, கட்சி சின்னத்தையும் வெளியிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது இது குறித்து பதில் அளித்த அமைச்சர் ஜெயகுமார்,தினகரன் அணி அல்ல அது தமிழ்நாட்டிற்கு பிடித்த சனி என குறிப்பிட்டு பேசினார்.

அதாவது தங்கள் கட்சியிலிருந்து தினகரன் அணி ஒதுக்கி வைத்தது,சனியை ஒதுக்கி வைத்ததாகவும்,ஒரு பெரிய கொலைக்கார குடும்பத்திடம் இருந்து கட்சியை காப்பாற்றி உள்ளதாகவும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

மேலும்,தினகரனுக்கு, "ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என நினைத்தார்கள்.. அது முடியவில்லை... கட்சி சின்னத்தை கைப்பற்ற நினைத்தார்கள் அதுவும் முடியவில்லை...அந்த விரக்தியில் அவர்கள் எதுவேண்டுமென்றாலும் பேசுவார்கள்..என  அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.