2 கிலோ முன்னா மற்றும் 5 கிலோ சோட்டு சிறிய சிலிண்டர்கள் அறிமுகம்..! விலை எவ்வளவு தெரியும்..?
இரண்டு கிலோ முன்னா மற்றும் ஐந்து கிலோ சோட்டு எனப்படும் சிறிய சிலிண்டர்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி இன்று சென்னையில் அறிமுகப்படுத்துகிறார்.
சிறிய வகை சிலிண்டர்கள் அறிமுகம்
திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம், சென்னை மாநகரில் 12 எரிவாயு கிளைகளை நடத்தி வருகின்றது. இவை வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இச்சேவைகளின் அடுத்த கட்டமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ மற்றும் 5 கிலோ இண்டேன் இலகு ரக சிலிண்டர்களை, சங்கத்தின் சுயசேவைப் பிரிவுகள் மூலம் விற்பனை செய்ய முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றுள் 2 கிலோ இலகு ரக சிலிண்டர் “முன்னா" என்றும், 5 கிலோ இலகு ரக சிலிண்டர் “சோட்டு” என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த இலகு ரக எரிவாயு சிலிண்டர்கள் பலதரப்பட்ட மக்களின், பிரத்யேகமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
யாருக்கு பயனுள்ளதாக அமையும்
i. இடம் பெயரும் தொழிலாளர்கள்
II. நடைபாதை வியாபாரிகள், சிறு வணிகர்கள்
i. மீனவர்கள், படகு இயக்குபவர்கள், லாரி ஓட்டுநர்கள்
iv. மாணவர்கள்
V. சுற்றுலா செல்வோர்க்கு இந்த சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளது.
மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம்... அறிவித்தது மனிதநேய மக்கள் கட்சி!!
விலை எவ்வளவு ?
இந்த இலகு ரக எரிவாயு உருளைகளை பெற இருப்பிடச் சான்று (Proof of address) தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இலகு ரக எரிவாயு உருளைகள் பலதரப்பட்ட மக்களும் பயனுறும் வகையில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 2 கிலோ “முன்னா" ரக எரிவாயு உருளையின் விலை ரூ.961.50 புதிய இணைப்பிற்கும், உருளைகளில் எரிவாயு நிரப்புவதற்கு (refill) ரூ.253.50-ம், என்றும், மற்றும் 5 கிலோ "சோட்டு" ரக எரிவாயு உருளையின் விலை ரூ.1528/- புதிய இணைப்பிற்கும், உருளைகளில் எரிவாயு நிரப்புவதற்கு (refill) ரூ.584/- என்றும் இந்தியன் ஆயில் நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மேலும் 5 கிலோ சோட்டு ரக எரிவாயு உருளையுடன் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள "குக்டாப்" அடுப்புகளும் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன.இந்த இலகு ரக எரிவாயு உருகைளைப் பெறுவதற்கு எவ்வித முன்பணமும் செலுத்தத் தேவையில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
எந்த எந்த இடங்களில் கிடைக்கும்
காலி இலகு ரக எரிவாயு உருளைகளை, விற்பனை முனையங்களில் ஒப்படைத்து, நிரப்பப்பட்ட எரிவாயு உருளைகளை, அதற்குரிய கட்டணத்தை மட்டும் செலுத்தி, வேறு எந்த கூடுதல் கட்டணமும் செலுத்தாமல் பெற்றுக் கொள்ளலாம். இலகு ரக எரிவாயு உருளைகளைப் பெற முகவரிச்சான்று (Proof of address) சமர்ப்பிக்கத் தேவையில்லை, அடையாள அட்டை ஏதேனும் (Proof of identity) ஒன்றினை சமர்ப்பித்தால் போதுமானது. இலகு ரக எரிவாயு உருளைகள் கீழ்க்கண்டவாறு சங்கத்தின் சுயசேவைப் பிரிவுகளில் விற்பளை செய்யப்படவுள்ளன. 1. திருவல்லிக்கேணி சுயசேவைப் பிரிவு, 2. தேனாம்பேட்டை சுயசேவைப் பிரிவு, 3. கீழ்ப்பாக்கம் சுயசேவைப் பிரிவு, 4. இராஜா அண்ணாமலைப்புரம் சுயசேவைப் பிரிவு 5. இராயப்பேட்டை சுயசேவைப் பிரிவு விற்பனை செய்யப்பட உள்ளது.
இதையும் படியுங்கள்