Asianet News TamilAsianet News Tamil

என்னை சந்திக்க யாரும் வர வேண்டாம்.! மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் ஐ.பெரியசாமி திடீர் அறிக்கை

உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  அமைச்சர் ஐ.பெரியசாமி, தன்னை நேரில் வந்து சந்திக்க யாரும் வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

Minister I Periyasamy has insisted that no one should visit him in the hospital KAK
Author
First Published Oct 3, 2023, 2:02 PM IST | Last Updated Oct 3, 2023, 2:02 PM IST

ஐ.பெரியசாமிக்கு உடல் நிலை பாதிப்பு

தமிழக அமைச்சர்களில் மூத்த அமைச்சராக இருப்பவர் ஐ.பெரியசாமி, கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்ள திண்டுக்கல்லில் இருந்து சென்னை வந்தார். வரும் வழியில் அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது  சக்கரை அளவு குறைந்ததன் காரணமாக திடீரென ஏற்பட்ட மயக்கம் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தது.  

இதனை தொடர்ந்து அமைச்சர் ஐ. பெரியசாமியை, மருத்துவமனைக்கு வந்து அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து  சந்தித்து வந்தனர். இதனை தொடர்ந்து கடந்த 4 நாட்களாக சிகிச்சையில் இருக்கும் அமைச்சர் ஐ பெரியசாமியை திண்டுக்கல் மட்டுமில்லாமல் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் பார்க்க மருத்துவமனையில் குவிய தொடங்கினர். 

Minister I Periyasamy has insisted that no one should visit him in the hospital KAK

மருத்துவமனைக்கு வர வேண்டாம்

இந்த நிலையில்தான்  மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் ஐ.பெரியசாமியின் லெட்டர் பேடில் இருந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக துணைச்செயலாளர் நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தான் நலமாக இருப்பதாகவும் டெங்கு மற்றும் தொற்று நோய் பரவாமல் இருக்க தன்னை நேரில் சந்தித்து நலம் விசாரிப்பதை தவிர்க்கவும், சிகிச்சை முடிந்து வீடு திரும்பியவுடன் அனைவரையும் நேரில்  சந்திப்பதாக அந்த அறிக்கையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்து இருக்கிறார். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..! சென்னையில் இரவில் மழை பெய்யுமா.? வானிலை ஆய்வு மையம் தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios