MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..! சென்னையில் இரவில் மழை பெய்யுமா.? வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை..! சென்னையில் இரவில் மழை பெய்யுமா.? வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.  

2 Min read
Author : Ajmal Khan
Published : Oct 03 2023, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
rain alerts

rain alerts

தமிழகத்தில் எந்த பகுதியில் மழை பெய்யும்.?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

04.10.2023 முதல் 09.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.
 

25

சென்னை வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

35
rain

rain

பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): 

குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 13, நாகர்கோயில் (கன்னியாகுமரி) 10, கன்னியாகுமரி, கொட்டாரம் (கன்னியாகுமரி) 8, அடையாமடை (கன்னியாகுமரி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி) தலா 7, 

45

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 

03.10.2023 மற்றும் 04.10.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  
 

55

வங்கக்கடல் பகுதிகள்:

03.10.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள்  மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. 

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு மழை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பட்ஜெட் குறித்து வழக்கம் போல் முதலமைச்சர் சில குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் - அண்ணாமலை பேட்டி
Recommended image2
தென் பெண்ணையாறு பிரச்சனை.. உடனே நடுவர் மன்றம்.. உச்சநீதிமன்றம் அதிரடி.. மத்திய அரசுக்கு செக்!
Recommended image3
ஓவர் பேரத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட பிரேமலதா...! கதவை மூடிய திமுக..! சிக்கலில் தேமுதிக..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved