பாலாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதா.? இரு மாநில நட்பிற்கு ஏற்றதல்ல..சட்டநடவடிக்கை எடுப்போம்- துரைமுருகன்

தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 

Minister Duraimurugan has said that legal action will be taken against the construction of a dam across Palar KAK

பாலாற்றின் குறுக்கே அணை

பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டி உள்ளதாக வந்துள்ள செய்திக்கு  நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். இது 1892 ஆம் ஆண்டைய மதராஸ் மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.

1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது. 

Minister Duraimurugan has said that legal action will be taken against the construction of a dam across Palar KAK

உச்சநீதிமன்றத்தில் வழக்கு

இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும் இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று மாண்புமிகு உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் அளித்த குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பது 1892 ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும் உச்சநீதிமன்றம் மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும் இதற்கு முன் சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையை கட்ட முயற்சித்த போது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு )O.S. No. 2 of 2006 மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018- ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பாணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து மற்றும் ஒரு சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில், O.S. 3 of 2016 தொடுத்துள்ளது. இந்த வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு 2 அசல் வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயற்சிப்பதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் (Budget) பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும். இச்செயல் இருமாநிலங்களின் நட்பிற்கு ஏற்றதல்ல. மேலும் கூட்டாச்சிக்கு எதிரானது.

Minister Duraimurugan has said that legal action will be taken against the construction of a dam across Palar KAK

சட்டபூர்வமான நடவடிக்கை

ஆகையால் ஆந்திர அரசு இந்த அணைக்கட்டும் பிரச்சினை, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது இம்மாதிரியான எந்த செயல்களையும் மேற்கொள்ள கூடாது வித என இருமாநிலங்களின் நலன் கருதி கேட்டுக் கொள்கிறேன். இவைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏதாவது கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளுமேயானல் தேவையான சட்டபூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாட்டின் நலன் கருதி மேற்கொள்ளும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா; திமுகவை விட்றாதீங்க! திருப்பூரை தெறிக்க விட்ட பிரதமர் மோடி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios