குழந்தைகளின் மெய்சிலிர்க்க வைத்த பாரதியார் நாடகம்.. நெகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி !!
மாணவர்கள் நடத்திய பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை கண்டுகளித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882 டிசம்பர் 11 ஆம் தேதி பிறந்த பாரதியார், மக்களிடம் விடுதலை உணர்ச்சியை ஏற்படுத்தும் பல பாடல்களை இயற்றினார். சுதேசமித்திரன், சக்ரவர்த்தினி, பால பாரதம் போன்ற பத்திரிகைகள் மூலம் கட்டுரை, கவிதைகளை எழுதி, மக்களின் உள்ளங்களில் சுதந்திர தாகத்தை வளர்த்தார்.
பெண் விடுதலை தொடர்பாக அவர் எழுதிய பாடல்கள் வரலாற்றில் நிலைத்து நிற்பவை. இந்த வருடம் பாரதியாரின் 141வது பிறந்த நாள் தமிழ்நாடு மட்டுமில்லாது உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில், கனவு மெய்பட வேண்டும் என்ற மகாகவி பாரதியின் வாழ்க்கை நாடகம் அரங்கேற்றப்பட்டது.
இதையும் படிங்க.. உனக்கு 20.. எனக்கு 42 - ஆசிரியரை கரம் பிடித்த மாணவி.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ !!
இந்த நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மகாகவி பாரதியின் வாழ்க்கை நாடகத்தை பார்த்து கண் கலங்காமல் யாராவது இருந்தார்கள் என்று சொன்னால் அவர்கள் இந்தியனாக, தமிழனாக இருக்க முடியாது. அம்பத்தூர் மாநகராட்சி பள்ளியின் மாணவர்களின் வேங்கை நடிப்பைக் கண்டு, அமைச்சராய், தந்தையாய், தலை வணங்குகிறேன்’ என்று நெகிழ்ச்சியாய் கூறினார்.
சென்னை கோட்டூர் புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் பள்ளியில் படிக்கும் 141 குழந்தைகளும் ஒருங்கிணைந்து பாரதியின் வாழ்க்கை வரலாற்று நாடகத்தை அரங்கேற்றினர்கள். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த நாடகத்தை அங்கிருந்த அனைவரும் நெகிழ்ச்சியுடன், உருக்கமாக பார்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க.. முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !