42 வயதான ஆசிரியர் 20 வயது மாணவியை திருமணம் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.
காதலுக்கு வயதில்லை. வயது என்பது வெறும் எண் தான் என்று கூறப்படுவதுண்டு. சில திருமணங்கள் வயதை பார்க்காமல் நடப்பதை பார்க்கிறோம். அப்படிப்பட்ட திருமணம் ஒன்று பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது.
பீகாரில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தில் 42 வயது ஆசிரியர், 20 வயது பெண்ணை மணந்தார். அந்தப் பெண் வேறு யாருமில்லை அவருடைய பயிற்சி மாணவி தான் அந்தப்பெண். இருவரும் திருமணம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ஒருவர் பதிவிட, அது வைரலாகி வருகிறது. அந்த மாணவி ஆசிரியர் பயிற்சி வகுப்புகளில் ஆங்கிலம் படித்து வந்ததாக கூறப்படுகிறது.
![]()
இதையும் படிங்க.. முதல்வரின் முக்கிய துறை.. நீங்க தான் அமைச்சரா ? உதயநிதி ஸ்டாலின் சொன்ன ‘அந்த’ பதில் !
அப்போது இருவரும் நெருங்கி பழக, அது படிப்படியாக காதலாக மாறியது. இதையடுத்து, கடந்த ஆசிரியை வியாழக்கிழமை கோயிலுக்குச் சென்று திருமணம் செய்து கொண்டார். ஆசிரியரின் வயது 42, மாணவியின் வயது 20. ஆசிரியரின் மனைவி பல வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறும்போது, மாணவி ஸ்வேதா குமாரி ரோஸ்தா பஜாரில் உள்ள சங்கீத் குமாரின் பயிற்சி வகுப்பில் ஆங்கிலம் படிக்க வந்தார். அங்கு இருவரும் காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், சட்ட அங்கீகாரம் பெற, நீதிமன்றத்தில் திருமணச் சான்றிதழையும் பெற்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க.. பொய் வாக்குறுதி.. குறுக்கு வழி அரசியல்வாதிகளிடம் உஷாராக இருங்கள்.! எதிர்கட்சிகளை அதிரவைத்த பிரதமர் மோடி