தமிழகத்தில் நாளை முதல் பால் தட்டுப்பாடு? பால் உற்பத்தியாளர்களின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
தமிழகத்தில் நாளை முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கூட்டுறவுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு, மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் பசும்பால் ஒரு லிட்டர் ரூ.35 என்ற நிலையிலும், எருமை பால் 1 லிட்டர் ரூ.44 என்ற விலையிலும் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மாட்டிற்கான தீவனம் விலையேற்றம், பல்வேறு மூலப்பொருட்கள் விலையேற்றம், விவசாயத்திற்கான உரம் உள்ளிட்ட பொருட்களின் விலையேற்றத்தைக் காரணம் காட்டி கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி பசும்பால் கொள்முதல் விலையை ரூ.20 உயர்த்தி ரூ.55க்கும், எருமை பால் கொள்முதல் விலையை ரூ.44ல் இருந்து ரூ.68ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
தர்மபுரியில் கோர விபத்து: தரைமட்டமான பட்டாசு குடோன்; 2 பேர் உடல் சிதைந்து பலி
இந்த நிலையில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருடன் பால் உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையானது இறுதியில் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நாளை முதல் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகம் செய்யப்போவதில்லை என்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்க தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நான் பேசுவதற்கு பல விசயங்கள் உள்ளன; ஆனால் பேசக்கூடிய மனநிலையில் இல்லை - திருச்சி சிவா வேதனை
பால் உற்பத்தியாளர்களின் இந்த முடிவால் ஆவினில் சுமார் 5 லட்சம் லிட்டர் பால் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பால் உற்பத்தியாளர்கள் சிலர் பாலை அண்டை மாநிலங்களுக்கு விநியோகம் செய்வதால் தமிழகத்தில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதல் தட்டுப்பாடு என்ற நிலை ஏற்பட்டுள்ளது.