பிற மாவட்டங்களைக் காட்டிலும் தமிழகத்தில் மட்டும் தான் வெளிமாநில தொழிலாளர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தனம் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் 900 இருக்கைகள் மற்றும் குளிர்சாதன வசதியுடன் அமையவுள்ள கலையரங்கத்திற்கு தமிழக சுகாதாரதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “நந்தனம் கல்லூரி மாணவர்களுக்காக ரூ.3.70 கோடி மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது.
கலையரங்கத்திற்காக சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டதோடு, குளிர்சாதன வசதி போன்ற கூடுதல் வசதிளுக்காக ரூ.3.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் மாணவர்கள் அமரும் வகையில் கலையரங்கம் கட்டப்பட உள்ளது.
வடமாநில தொழிலாளர்களுக்கு எதிரான தற்போதைய நிலைக்கு சீமான் தான் காரணம் - எச்.ராஜா காட்டம்
சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து சைதாபேட்டைக்கு பெருமை சேர்த்தவர் கருணாநிதி. எனவே கலையரங்கத்திற்கு கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று கல்லூரியின் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் தடை செய்யப்படும், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மருந்துகள் தமிழகத்திலும் தடை செய்யப்படும்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் பாதிக்கப்படுவதாக கற்பனையான செய்திகள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. கொரோனா காலகட்டத்தில் கூட எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது வெளி மாநில தொழிலாளர்களுக்கு 'ஒன்றிணைவோம் வா' திட்டம் மூலம் பல உதவிகளை செய்தார். முதலமைச்சராக வந்த பிறகு அவர்களது பயணச் செலவை ஏற்று பத்திரமாக ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்; நிறுவன உரிமையாளர்கள் மனு
தமிழகத்தில் மட்டுமே வெளிமாநில தொழிலாளர்கள் மிக மிக பாதுகாப்பாக இருக்கின்றனர். முதலமைச்சரின் பிறந்தநாள் விழாவில் வட இந்திய அரசியல் தலைவர்கள் பங்கேற்றதால் பொறுமையில் சிலர் வீண் வதந்தியை கட்டவிழ்த்து விடுகின்றனர்.
கொரோனா விதிகளை தொடர்ந்து கடைபிடித்தால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பையும் தடுக்க முடியும். வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த, தேவைப்பட்டால் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும், தற்போது அந்த அளவிற்கு பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
