metro labour death

சென்னை, மாநகராட்சி அருகே மெட்ரோ பணியின்போது இரும்பு ராடு விழுந்து விபத்துக்குள்ளானதில், அம்ரிந்தர் ராம் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சைட் இன்ஜினியர் விஜயகுமாரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் மெட்ரோ ரயில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் மற்றும் விமான நிலையத்தில் இருந்து சின்னமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது. 

அதேபோல், நேரு பூங்காவிலிருந்து திருமங்கலம் வரை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை இயக்கப்பட்டு வருகிறது. சென்னை, மாநகராட்சி கட்டடம் அருகே சுரங்க ரயில் பாதை பணிகள் நடைபெற்று வருகிறது. 60 அடி ஆழத்தில் பீகாரை சேர்ந்த அம்ரீந்தர் ராம் என்பவர் வேலை செய்து வருகிறார்.

அப்போது, இரும்பு ராடு ஒன்று திடீரென மேலிருந்து தொழிலாலி அம்ரேந்தர் ராம் மீது விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து, சைட் இன்ஜினியர் விஜயகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.