Asianet News TamilAsianet News Tamil

சோழிங்கநல்லுரை புரட்டிப் போட்ட வர்தா… முற்றிலும் துண்டிக்கப்பட்ட செம்மஞ்சேரி…

meterology annuoucement
Author
First Published Dec 13, 2016, 3:10 PM IST


சோழிங்கநல்லுரை புரட்டிப் போட்ட வர்தா… முற்றிலும் துண்டிக்கப்பட்ட செம்மஞ்சேரி…

‛வர்தா' புயல் சென்னையை கடந்த போது, அதிகபட்சமாக சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், 38 சென்டிமீட்டர் மழை பெய்ததாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,

‛வர்தா' புயல் சென்னையை கடந்த போது, மணிக்கு 120 கிலோமீட்டர்  வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயலின் மையப்பகுதி சென்னையை கடந்த போது, மணிக்கு, 70 கிலோமீட்டர்., வேகத்தில் காற்று வீசியது. கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக, சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில், 38 சென்டிமீட்டரும், காட்டுப்பாக்கத்தில், 34 சென்டிமீட்டரும். காஞ்சிபுரத்தில், 28 சென்டிமீட்டர்  மழையும் பெய்தது.

சென்னையை கடந்து சென்ற வர்தா புயல், தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி தர்மபுரியில் இருந்து, 40 கிலோமீட்டர்  தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகத்தின் உள் மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட பகுதிகளில், பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும்  சில இடங்களில் கன மழை பெய்யலாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் திரு.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

 சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே சென்னையை அடுத்த செம்மஞ்சேரி கடும் புயல் மற்றும் மழை காரமாக முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios