வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்த நிலையில், கோடை மழையின் காரணமாக குளுமையான வானிலை நீடிக்கிறது. நள்ளிரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் 26 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 13 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
மேலடுக்கு சுழற்சியால் மழை
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக மக்கள் வீட்டில் இருந்து வெளியே செல்ல முடியாத நிலை நீடித்தது. இந்த நிலையில் மக்களை மகிழ்ச்சி அடையவைக்கும் வகையில், நேற்று முதல் குளுமையான வானிலையானது நீடித்தது. நேற்று இரவு தொடங்கிய மழை காலையிலும் நீடித்து வருகிறது. இந்து தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது மழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த மழை
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20.06.2023 முதல் 22.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனம்பாக்கத்தில் 13 செ.மீ மழை
இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில், மீனம்பாக்கத்தில் 13.7 செ.மீட்டர், நந்தனம் 11.7 செ.மீட்டர், தரமணி 11.7 செ.மீட்டர், செம்பரம்பாக்கம் 10.9 செ.மீட்டர், மேற்கு தாம்பரம் 8 செ.மீட்டர், நுங்கம்பாக்கம் 6.7 செ.மீட்டர், காஞ்சிபுரம் 7.9 செ.மீட்டர், திருவள்ளூர் 7.செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 செ.மீ மழை பதிவாகி இருந்தது, நடப்பாண்டு ஜூன் மாதம் 13.8 செ.மீ மழை பதிவாகி இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கொட்டிய மழை.. 2k கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள் எப்படி.? வெதர்மேன் விளக்கம்
