27 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கொட்டிய மழை.. 2k கிட்ஸ் அதிர்ஷ்டசாலிகள் எப்படி.? வெதர்மேன் விளக்கம்

இன்று சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் நல்ல மழை பெய்து கொண்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் இன்று (19.06.2023) பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Rain poured in Chennai after 27 years Tamil Nadu Weatherman explained

தமிழகத்தில் சில மாதங்களாக அதுவும் குறிப்பாக  கடந்த மாதத்தில் சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்பம் வாட்டி வதைத்தது.100 டிகிரி தாண்டி வாட்டி வதைத்துக் கொண்டு இருந்த வெப்பம் நேற்று திடீரென மாறி ஊட்டி, ஏற்காடு போல சென்னை மாறியது.

வங்கக்கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூட மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

Rain poured in Chennai after 27 years Tamil Nadu Weatherman explained

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றிய அறிவிப்பில், " அடுத்த 24 மணி நேரத்திற்குள் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்தது. சென்னையில் கோடை வெப்பம் வாட்டி வதைத்து வந்தது. அக்கினி நட்சத்திர காலம் முடிந்த போதும் வெயிலின் தாக்கம் ரண கொடூரமாக இருந்தது.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே போவதற்கே அஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்துக் கொண்டு இருந்தது. நேற்று காலை சென்னை வானிலை மக்களுக்கு அப்படியொரு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. அதேபோல இன்று சென்னை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் நல்ல மழை பெய்து கொண்டு வருகிறது. இதனையொட்டி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் இன்று (19.06.2023) பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னையின் திடீர் வானிலை மாற்றம் மற்றும் மழை குறித்து பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன். தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “27 ஆண்டுகளுக்குப் பிறகு (வரலாற்றுச் சிறப்புமிக்க 1996 முதல்), சென்னையில் ஜூன் மாதம் பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டது. சென்னையில் பல நூற்றாண்டுகள் மற்றும் அடையாறு போன்ற தென் சென்னையில் சில இடங்களில் 150 மி.மீ என்று நினைவில் கொள்ளுங்கள்.

SGB 2023-24: ஜூன் 19 அன்று தொடங்கவுள்ள தங்க பத்திர விற்பனை.. முதலீட்டாளர்களே மிஸ் பண்ணீடாதீங்க..!

1991, 1996க்கு பிறகு இப்போது 2023ல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இது இடியுடன் கூடிய மழையால் அல்ல, இது கடலில் இருந்து நகரும் மேகங்களிலிருந்து ஆகும்.வரலாறு காணாத வெப்பத்துக்குப் பிறகு, இதுபோன்ற மழையை இயற்கை ஈடுசெய்கிறது என்று சொல்லி வருகிறோம். இன்னும் கடலில் இருந்து மேக மூட்டத்துடன் மழை பெய்வது கனவாக உள்ளது. 1996க்குப் பிறகு ஜூன் மாதம் பள்ளிகளுக்கு, கிட்டத்தட்ட ஒரு வாரம் விடுமுறை கிடைத்தது.

2k குழந்தைகள் அதிர்ஷ்டசாலிகள், ஜூன் மாதத்தில் கடுமையான வெப்பம் மற்றும் இப்போது கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் சராசரியாக சென்னைக்கு 55 மி.மீ., சில இடங்களில் 6 மணி நேரத்திற்குள் ஒரே நாளில் 3 மடங்கு கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மழை குறித்து வெளியான மற்றொரு செய்தியில், “இன்று மீண்டும் வட தமிழகத்தை மையமாக வைத்து இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையின் கிழக்கே வீசும் புதிய புயல்கள் சற்று இளைப்பாறுவதற்கு முன் மற்றொரு தீவிர சென்னை மழையை கொடுக்க வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டி தூக்கலாமா..! ஜூன் 20ல் ஆஜர், இல்லைனா.? செந்தில் பாலாஜி தம்பிக்கு அமலாக்கத்துறை போட்ட ஸ்கெட்ச்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios