தட்டி தூக்கலாமா..! ஜூன் 20ல் ஆஜர், இல்லைனா.? செந்தில் பாலாஜி தம்பிக்கு அமலாக்கத்துறை போட்ட ஸ்கெட்ச்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வரும் 20 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது. இது தமிழக அரசியலில் குறிப்பாக திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிறகு செந்தில் பாலாஜி தொடர்பான சென்னை மற்றும் கரூரில் உள்ள இடங்களில் சோதனை நடைபெற்றது.
அமலாக்கத் துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியைக் கைது செய்தனர். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது அசோக் குமாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறி, அமலாக்கத் துறை அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி தொடர்புடைய மற்றவர்களை விசாரணைக்கு அழைக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசியல் வட்டாரங்களில் விசாரித்தபோது, பண மோசடி தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அது தொடர்பாக வரும் 20 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அசோக்குமாருக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
அதுமட்டுமின்றி, வழக்கு தொடர்பான ஆவணங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு, வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் விசாரணைக்கு ஆஜராகி, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பும். இதை தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என்று கூறப்படுகிறது.