Heavy Rain Alert in Tamil Nadu: இந்த 13 மாவட்டங்களில் அடிச்சு ஊத்தப்போகுதாம் மழை.. சென்னை வானிலை மையம்..!

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

Heavy rain today in 13 districts... meteorological department

தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய வெளியிட்ட செய்திக் குறிப்பில்;- தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று பெரும்பாலான இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க;- Chennai Rain !நள்ளிரவு முதல் வெளுத்து வாங்கும் கனமழை.. சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!

Heavy rain today in 13 districts... meteorological department

இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- ஊட்டி போல் குளு குளுவென மாறிய சென்னை..! திடீரென மாறிய வானிலைக்கு காரணம் என்ன.?

Heavy rain today in 13 districts... meteorological department

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 55  கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios