எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் எனத் துடிக்கும் பழனிசாமி: தங்கம் தென்னரசு

கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்வதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

Medical Waste Row: Thangam Thennarasu hits back Edappadi Palanisamy sgb

மருத்துவக் கழிவு விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எட்டப்பாடி பழனிசாமி,  எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் துடித்துக்கொண்டிருக்கிறார் என தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து தமிழக நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த பத்தாண்டுகால அடிமை அதிமுக ஆட்சியில் தான், கோவை, தேனி , திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட தமிழ்நாடு கேரளா எல்லையோர பகுதிகளில், கேரளாவில் இருந்து சட்டவிரோதமாக கழிவுகளை கொண்டுவந்து கொட்டி தமிழ்நாடே கேரளாவின் குப்பைத்தொட்டியாகி கிடந்தது.

அரசு ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வுத் திட்டம் வருதா? என்னென்ன பலன்கள் கிடைக்கும்?

விகடன் கட்டுரை:

2016 ஆம் ஆண்டு "மருத்துவக் கழிவுகள் அபாயம்: இன்னும் விழித்துக்கொள்ளாத தமிழகம்!" என்று விகடன் தனி கட்டுரையே வெளியிட்டது. 2019 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள இனாம் கரிசல்குளம் கிராமத்தில் கேரளாவில் இருந்து குப்பைகளை கொண்டுவந்து லாரி லாரியாக கொட்டிய லாரிகளை மக்களே சிறைபிடித்த நிகழ்வு என பல்வேறு உதாரணங்களை எடுத்துக்கூற முடியும்.      

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி அமைந்தவுடனே தமிழ்நாடு - கேரளா எல்லை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு கேரளா கழிவுகள் தமிழ்நாட்டிற்குள் நுழைவது பெருமளவு தடுக்கபட்டு வருகிறது. கழிவுகளை கொட்டுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எதிர்பாரா விதமாக நடக்கும் ஓரிரு நிகழ்வுகள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.

'இஞ்சி தின்ன குரங்கு'ன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா? இதுதான் அதோட கதை!

கேரளாவில் இருந்து வரும் கழிவுகள்:

சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர்பகுதிகளில் சட்டவிரோதமாக கேரளாவில் இருந்து கழிவுகளை கொண்டுவந்து கொட்டப்படுகிறது என புகார் வந்தவுடன் விரைந்து நடவடிக்கை எடுத்ததன் பேரில், கழிவுகளை கொட்டிய சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்த மனோகரன், மாயாண்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாட்டில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இதுகுறித்து உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறும் ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர் உத்தரவின் பேரில் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல் எதிலாவது அரசியல் செய்து பேர் எடுக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

QR கோடு மூலம் திருடும் சைபர் கிரிமினல்கள்! மோசடியைத் தவிர்ப்பது எப்படி?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios