மூன்றாவது அலை எப்போது முடியும் ? நல்ல தகவலை சொன்ன சுகாதார துறை செயலாளர்..

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Medical Secretary Radhakrishnan has said that the incidence of corona has started declining in 18 districts in Tamil Nadu

சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை வெல்வதற்கு மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. புதிய வகை கொரோனா பற்றி தேவையற்ற பீதி வேண்டாம். 

Medical Secretary Radhakrishnan has said that the incidence of corona has started declining in 18 districts in Tamil Nadu

மூன்றாவது அலையில் முதியவர்கள் தான் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளனர். அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று குறைய தொடங்கும் என்பதால், மக்கள் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று குறைந்துள்ளது. கேரள எல்லை பகுதியில் கொரோனா தொற்று இன்னும் குறையாததால், அந்த பகுதி மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும்.

Medical Secretary Radhakrishnan has said that the incidence of corona has started declining in 18 districts in Tamil Nadu

இதனிடையே, தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 25,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, நேற்று மட்டும் 24,418 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 27,885 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதுவரை கொரோனா தொற்றால் 33,03,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios