Markandeya katju twitte

சிறைக்கைதிக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக போராட்டம்…இளைஞர்களுக்கு ஐடியா கொடுக்கும் கட்ஜு…

சிறைக்கைதி சசிகலாவின் பினாமியான கடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களின் வீடுகள் முன்பு தமிழக இளைஞர்கள் போராட்டம் நடத்த வேண்டும் என முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்ற போது இளைஞர்கள்,மற்றும் மாணவர்களுக்கு பேஸ்புக்,டுவிட்டர் மூலம் பெருமளவு ஆதரவு அளித்தவர் கட்ஜு.

போராட்டத்துக்கான ஐடியா கொடுத்ததோடு அதில் ஈடுபட்டோருக்கும் ஆதரவும் அளித்தார், தொடர்ந்து சசிகலா-ஓபிஎஸ் பிரச்சனையில் தனது எண்ணங்கனை தொடர்ந்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் மனசாட்சியின்றி நடந்து கொண்ட அதிமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என கட்ஜு தனது பேஸ் புக்கில் பதிவு செய்துள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் நாட்டையே தமிழக இளைஞர்கள் வியக்க வைத்தீர்கள். தற்போது, மீண்டுமொரு போராட்டத்தை இளைஞர்கள் நடத்த வேண்டும் என தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் விரும்புகிறது. என கட்ஜு தெரிவித்துள்ளார்.


ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் உள்ள கைதியின் பினாமிக்கு, வெட்கமில்லாமல் ஆதரவு அளித்த எம்எல்ஏக்களின் வீடு மற்றும் அலுவலகங்கள் முன் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்

எம்எல்ஏக்கள் எங்கு சென்றாலும், அங்கெல்லாம் அவர்களுக்கு கறுப்பு கொடி காட்ட வேண்டும் - எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் - அவர்களை சமூகத்தில் புறக்கணிக்க செய்வதுடன், எந்த நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கக்கூடாது எனவும்
சோழர்களின் வழிவந்த தமிழக மக்களின் கோபத்தை எம்எல்ஏக்கள் உணர செய்ய வேண்டும். என்றும் மார்கண்டேய கட்ஜு தனது டுவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.