சென்னையில் மாரத்தான் போட்டி; 20,000 போட்டியாளர்கள் பேர் பங்கேற்பு
நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் நிதி திரட்டவும், சென்னையில் இன்று 4 வகைகளில் மாரத்தான் போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில், நிதி திரட்டவும் சென்னையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. 4 வகைகளில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக மக்களுக்கு எதிராக செயல்படும் ஆளுநர்..! அரசியல் சாசனத்திற்கு விரோதமானது- கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்
முதலாவதாக சென்னை நேப்பியார் பாலத்தில் இருந்து அதிகாலை 4 மணிக்கு தொடங்கிய மாரத்தான் போட்டி சாந்தோம், அடையாறு, மத்திய கைலாஷ், டைட்டல் பார்க், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர் வழியாக இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருகில் நிறைவுபெறுகிறது. இந்த போட்டியின் மொத்த தூரம் 42 கி.மீ. ஆகும்.
அடுத்ததாக காலை 5 மணிக்கு பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரையில் இருந்து தொடங்கிய போட்டி இந்திய கல்சார் பல்கலைக்கழகம் அருகே நிறைவுபெறுகிறது. தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்த இந்த போட்டியின் மொத்த தூரம் 32 கி.மீ. ஆகும்.
இதனைத் தொடர்ந்து 10 கி.மீ. தூர பந்தயம் காலை 6 மணிக்கு நேப்பியார் பாலத்தில் தொடங்கி சாந்தோம், அடையாறு வழியாக தரமணியில் நிறைவுபெறுகிறது. இதன் தூரம் 10 கி.மீ. ஆகும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பரிசுகள் வழங்கப்படுகின்றன. அனைத்து போட்டிகளிலும் சேர்த்து மொத்தமாக சுமார் 20 ஆயிரம் போட்டியாளர்கள் இந்த மாரத்தானில் கலந்து கொண்டுள்ளனர்.