தாமிரபரணியை காக்க களமிறங்கிய இளைஞர் படை.. அகற்றப்பட்ட சீமை கருவேல மரங்கள்!
இளைஞர்கள் ஆற்றங்கரையை தூய்மை செய்தபோது அதன் அருகில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளம் கிராமத்திற்கு அருகில் உள்ள ஜடாயுத் தீர்த்த தாமிரபரணி ஆற்றங்கரையை சுத்தம் செய்யும் பணியில் பல இளைஞர்கள் கலந்துகொண்டது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இன்று சனிக்கிழமை பல இளைஞர்கள் ஒன்றுகூடி ஆற்றங்கரையை தூய்மை செய்தனர்.
இளைஞர்கள் ஆற்றங்கரையை தூய்மை செய்தபோது அதன் அருகில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் குப்பைகள், சிதறி கிடந்த பாட்டில்கள் உள்ளிட்டவை ஆற்றங்கரையில் இருந்து அகற்றப்பட்டு அந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டது.
இதுமட்டுமல்லாமல் மழை காலம் நெருங்கி வரும் நிலையில் ஆற்றின் கரையில் அடர்ந்து கிடந்த ஆகாயத்தாமரைகளையும் தன்னார்வலர்கள் அகற்றினர். திருநெல்வேலி மாவட்டம் அருகங்குளத்திற்கு அருகில் உள்ள இந்த தாமிரபரணி ஆற்றினை, திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வட்டாட்சியர் திரு.க. செல்வன் அவர்கள் தலைமையில் இந்த சுத்தம் செய்யும் பணி நடந்தது.
மதுரையில் பிரமாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம்.. திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த தூய்மை பணியில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள், புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள், ஆப்தமித்ரா தன்னார்வலர்கள், எக்ஸ் பவுண்டேஷன் அமைப்பினர் மற்றும் வி.எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பினர் ஆகியோர் இணைந்து சுத்தம் செய்தது குறிப்பிடத்தக்கது. காலை 8 மணியிலிருந்து சுமார் 2.30 மணி நேரம் இந்த தூய்மை செய்யும் பணி நடந்தது.
இன்று நடைபெற்ற தாமிரபரணி தூய்மை பணியின் போது தொண்டாற்றிய 50-க்கு மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு, வாட்டாசியர் திரு. க.செல்வன் அவர்கள் தனது சொந்த செலவில் காலை உணவு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.