Asianet News TamilAsianet News Tamil

மாஞ்சா நூல் பயன்படுத்த நிரந்தர தடை! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?

மக்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நைலான், பிளாஸ்டிக் மற்றும் பிற செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா / காற்றாடி நூல் தயாரித்தல், விற்பனை செய்தல் சேமித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 

manja nylon thread Permanent ban...tamilnadu government tvk
Author
First Published Nov 1, 2023, 6:48 AM IST | Last Updated Nov 1, 2023, 6:50 AM IST

நைலான், பிளாஸ்டிக் அல்லது பிற செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தமிழ்நாடு அரசு முழுமையாக தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்;- நைலான், பிளாஸ்டிக் அல்லது செயற்கை பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூல் என பிரபலமாக அறியப்படும் மக்கும் தன்மையற்ற காற்றாடி நூலை தயாரித்தல் விற்பனை செய்தல், சேமித்தல், கொள்முதல் செய்தல், இறக்குமதி செய்தல், பயன்படுத்துதல் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு முழுமையான தடை விதித்துள்ளது. இது தொடர்பாக, 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதியிட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட்.!

manja nylon thread Permanent ban...tamilnadu government tvk

மேலும் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி தமிழ்நாடு அரசிதழில் இது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. காற்றாடி பறக்கவிடும் போட்டிகளின் போது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் குறிப்பாக பறவைகளுக்கும் பலத்தகாயங்கள் ஏற்படுவதற்கும், சில சமயங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கும் பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூலே காரணம் என்று அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த பிளாஸ்டிக் பூசப்பட்ட மாஞ்சா நூல்கள் வடிகால் பாதைகள் மற்றும் நிர்நிலைகளை அடைப்பதன் மூலம் கடுமையான சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. இது பறவைகள் மற்றும் பிற விலங்கினங்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

manja nylon thread Permanent ban...tamilnadu government tvk

மக்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் உயிர்களைப் பாதுகாக்கும் பொருட்டு நைலான், பிளாஸ்டிக் மற்றும் பிற செயற்கைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட மாஞ்சா / காற்றாடி நூல் தயாரித்தல், விற்பனை செய்தல் சேமித்தல், இறக்குமதி செய்தல் மற்றும் பயன்படுத்துதல் போன்றவற்றிற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;-  தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம்! இப்படியே ஆளுநர் செய்தால் ஆளுகின்ற அரசு மீதுதான் சிம்பதி ஏற்படும்! எஸ்.வி.சேகர்!

manja nylon thread Permanent ban...tamilnadu government tvk

இந்த அரசாணையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், வனத்துறை வனசரகர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள், நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளுக்கு மேற்படி அறிவிப்பை செயல்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இத்தடை உத்தரவினை மீறுபவர்களுக்கு சுற்றுச்சூல் (பாதுகாப்பு) சட்டம், 1986, (ஒன்றிய சட்டம் 29, 1986) விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios