பாபநாசம் அணையின் நீர்மட்டம், நேற்று ஒரு அடி உயர்ந்த நிலையில் இந்த அணையில் திறக்கும் தண்ணீரின் அளவு 200 கன அடியாக அதிகரித்த்து. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையும் பொய்த்து போனது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நெல்லை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பாபநாசம் அணையின் நீர்மட்டம், கடந்த 2 நாட்களில் 10 அடி உயர்ந்தது.

நேற்று முன்தினம் 31.30 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மேலும் 1 அடி உயர்ந்து 32.20 அடி ஆனது. அணைக்கு விநாடிக்கு 325 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து விநாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

34.70 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம், தற்போது 34.85 ஆக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 52 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்வரத்து குறைவாக உள்ளதால், நேற்று மணிமுத்தாறு அணை மூடப்பட்டது. கடந்த 2 நாட்களாக பெய்த பரவலான மழை நேற்று இல்லை.
மணிமுத்தாறு அணை மூடப்பட்ட போதிலும் பாபநாசம் அணையில் நீர் திறப்பு 100 கன அடியில் இருந்து 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டபோது, பாபநாசம் அணையின் நீர்மட்டம் குறைந்துவிட்து. இதனால், அந்த அணையில் இருந்து 100 கன அடி தண்ணீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 100 கன அடி தண்ணீரும் தினமும் 200 கன அடி தண்ணீர் குடிநீர் தேவைக்காக திறக்கப்பட்டது.