manal mafiya in kanchipuram
காஞ்சிபுரம் மாவட்டத்தில் லாரி மூலம் மணல் அள்ளுவது என்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டபாணி என்பவர் லாரி மூலம் மணல் அள்ளத் தொடங்கியுள்ளார்
கூவத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் மணல் கொள்ளை நடப்பதாக தகவல் அறிந்து அதனை தடுக்க சென்றுள்ளார் வருவாய் ஆய்வாளர் சீனிவாசன். அப்போது அவரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது
இதனால் பாதிப்புக்கு உள்ளான சீனிவாசன் போலீசில் புகார் தெரிவித்தார். வழக்கை பதிவு செய்த காவல் துறையினர் லாரி உரிமையாளர் தண்டபாணியை கைது செய்து லாரியையும் பறிமுதல் செய்தனர்.
