Asianet News TamilAsianet News Tamil

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு... பள்ளிக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

management is responsible for the safety of students during school hours says school education dept
Author
Tamilnadu, First Published Aug 16, 2022, 8:44 PM IST

பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என தனியார் பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளி நேரத்தில், வளாகத்திற்குள் உள்ள மாணவர்களின் பாதுகாப்பிற்கு பள்ளி நிர்வாகமே, முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.

இதையும் படிங்க: “சோலா பூரியில் புழு.. சென்னை வி.ஆர் மாலில் உள்ள பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி சம்பவம்”

தனியார் பள்ளிகள் நடந்து கொண்ட விதம், விசாரணையில் உறுதியாகும் பட்சத்தில், சட்டப்பூர்வ நடவ டிக்கை எடுக்கப்படும். பெற்றோர் தயங்காமல், புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை, கோவையில் சில தனியார் பள்ளிகள், பெற்றோரிடம் உறுதி மொழி படிவம் பெற்றதாக புகார் எழுந்தது.

இதையும் படிங்க: கடலில் 50 அடி ஆழத்தில் நிச்சயதார்த்தம்… கவனத்தை ஈர்த்த காதல் ஜோடியின் செயல்!!

மாணவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் பள்ளி நிர்வாகம் படிவம் பெற்ற விவகாரம் சமூக வலைதளத்தில் பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், கல்வித்துறை சார்பில், அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்  பள்ளி நேரத்தில் மாணவர்களின் பாதுகாப்பிற்கு நிர்வாகமே பொறுப்பு என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios