Asianet News TamilAsianet News Tamil

கடலில் 50 அடி ஆழத்தில் நிச்சயதார்த்தம்… கவனத்தை ஈர்த்த காதல் ஜோடியின் செயல்!!

50 அடி ஆழத்தில் கடல் நீருக்குள் மூழ்கி நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடியின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

couples engagement 50 feet deep under sea caught the attention
Author
Chennai, First Published Aug 16, 2022, 7:48 PM IST

50 அடி ஆழத்தில் கடல் நீருக்குள் மூழ்கி நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்திய காதல் ஜோடியின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அன்மைகாலமாக கடல்களில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து காணப்படுகிறது. அதனை தவிர்க்க பல்வேறு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடலுக்குள் சேரும் தேவையற்ற பிளாஸ்டிக் குப்பைகளை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடலுக்குள் சுமார் 50 அடி ஆழத்தில் நடந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த சுரேஷும், சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த கீர்த்தனாவை கடந்த ஐந்து ஆண்டுகளாக சென்னையில் ஒரே அலுவலகத்தில் பணி புரிந்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: மனைவி இறந்த சோகம்... காவலர் எடுத்த விபரீத முடிவால் அதிர்ச்சி!!

couples engagement 50 feet deep under sea caught the attention

இவர்கள் நண்பர்களாக பழகிவந்த நிலையில் அது காதலாக மாறியுள்ளது. இதை அடுத்து இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். வித்தியாசமாக தங்களது நிச்சயதார்த்தம் நடத்திக் கொள்ள நினைத்த இவர்கள், கடலில் சேரும் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவுகளை தவிர்க்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கோடு, தங்களது நிச்சயதார்த்த நிகழ்வை சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த வெட்டுவாங்கேனி கடற்கரை பகுதியில் சுமார் 50 அடி ஆழத்தில் நடத்தினர். 

இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு... நாளை தீர்ப்பு வழங்குகிறது உயர்நீதிமன்றம்!!

couples engagement 50 feet deep under sea caught the attention

சுவாசிக்க ஏதுவாக ஆக்சிஜன் சிலிண்டருடன் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தன் பயிற்சியோடு, 50 அடி ஆழத்தில் கடல் நீருக்குள் மூழ்கி இருவரும் மாலை மாற்றிக் கொண்டதோடு தங்க மோதிரத்தையும் ஒருவருக்கொருவர் அணிவித்து தங்களது நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக சுரேஷ் மற்றும் கீர்த்தனாவிற்கு நீச்சல் குளத்தில் ஆழ்கடலில் எப்படி நீந்துவது என்பது குறித்தான பயிற்சியை நீச்சல் குளத்தில் ஆழ்கடல் நீர்ச்சல் பயிற்சியாளர் அரவிந்த் வழங்கினார். இதையடுத்து இருவரும் ஆழ்கடலில் தங்களது நிச்சயதார்த்தத்தை வித்தியாசமான முறையில் நடத்திக் கொண்டனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios