விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசுப் பேருந்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அரசுப்பேருந்து ஒன்று மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

இந்த பேருந்தில் கோவில்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவர் பயணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த அரசு பேருந்து, சாத்தூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, 2 பேர் தங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென கருப்பசாமியை நோக்கி சுட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதனால், கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் பட்டப்பகலில் ஒரு சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பகீர் வீடியோ காட்சிகள்..!!!