“ஹலோ, வனத்துறையா.. இவரு பாம்புகளை வைத்து என்ன பன்றாரு பாருங்க..” வைரல் வீடியோ
திருமண வீடியோவில் பாம்புகளை வைத்து ஒரு நபர் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். பாம்பு மீதான பயத்தை இந்த பழமொழி மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் திருமண விழாவில் பாம்பு நுழைந்தால் என்ன செய்வது? ஒருவேளை திருமண விருந்தினர்கள் ஓடிவிடுவார்கள், குழப்பம் ஏற்படும். ஆனால் தற்போது ஒரு திருமணத்தில் நடந்த ஷாக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. திருமண நிகழ்ச்சியில் பல பாம்புகளைக் கொண்டு வந்த இவரை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரபாகரன் ஜான் என்பவர் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், திருமண மேடையில் மணமகன் மற்றும் மணமகளின் பெயர்கள் எழுதப்பட்டுள்ளது. ஆனால், மணமக்கள் மேடையில் இல்லாததால், பலர் நின்று கொண்டிருந்தனர். ஒரு நபர் திடீரென மேடையில் மிகுந்த உற்சாகத்துடன் வந்து தனது பையில் இருந்து பல பாம்புகளை வெளியே எடுக்கிறார். பின்னர் அவர் தனது இரு கைகளிலும் பாம்புகளை எடுத்து விருந்தினர்களுக்குக் காட்டுகிறார்.
பாம்பை பார்த்து அங்கிருந்த விருந்தினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எனினும், அந்த இளைஞன் உடனடியாக அந்த பாம்பை மீண்டும் பையில் போடுவதையும் வீடியோவில் பார்க்க முடிகிறது. அந்த வீடியோவில் மணமக்களின் பெயர் தமிழில் எழுதப்பட்டுள்ளதால் அது தமிழ்நாட்டில் நடந்த திருமணம் என்பது தெளிவாகிறது. வைரலான வீடியோவை பார்த்து நெட்டிசன்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த பதிவிற்கு பலரும் பலவிதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். சிலர் அந்த இளைஞரின் செயலை துணிச்சலானது என்று பாராட்டினாலும், பலர் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர் மற்றும் முட்டாள்தனம் என்று அழைத்தனர்.
ஒரு பயனர் தனது கருத்தில் எழுதினார், ” பார்க்கவே பயமாக இருக்கிறது. எதிரில் அமர்ந்திருக்கும் விருந்தினர்களிடம் ஒரு பாம்பு சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்." என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர் "தயவுசெய்து இதை மீண்டும் செய்யாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார். மூன்றாவது பயனர் "இது முட்டாள்தனம்; தயவுசெய்து இதை மீண்டும் செய்ய வேண்டாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பலரும் அந்த நபரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த நபரை முதலில் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர். சிலர் இந்த வீடியோ தமிழக வனத்துறையினருக்கும், தமிழக காவல்துறைக்கும், ப்ளூ கிராஸ் அமைப்புக்கும் டேக் செய்து வருகின்றனர்.
ஜஸ்ட் மிஸ்! ராட்சத மீனுக்கு உணவு கொடுத்த பெண்.. பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. வைரல் வீடியோ
- big snake viral video
- new viral video snake
- recent snake viral video
- snake
- snake girl viral video
- snake short video
- snake video
- snake video viral
- snake videos
- snake viral
- snake viral video
- snake viral video in india
- snake viral video today
- snake viral video twitter
- snake viral videos
- snakes
- snakes video
- viral
- viral news
- viral snake video
- viral video
- viral video snake in house
- viral videos