Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தின் 234 தொகுதி.. அரசு திட்டங்கள் குறித்த முழு தகவல்கள்.. அறிமுகமாகும் "மக்களுடன் ஸ்டாலின்" செயலி!

திமுக அரசு மக்களுக்கு என்ன செய்தது? தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? என்பது குறித்த பல தகவல்களுடன் ஒரு புதிய செயலியை முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளார். அந்த செயலியின் பெயர்தான் மக்களுடன் ஸ்டாலின்.

Makkaludan Stalin new app getting launched by tamil nadu chief minister stalin ans
Author
First Published Sep 16, 2023, 7:19 PM IST

மக்களுடன் ஸ்டாலின் என்ற செயலியை வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து இன்று ஒரு ஊடக அறிவிப்பு வெளியாகியுள்ளாது. அதில் இந்த செயலி குறித்த பல தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த செய்திக்குறிப்பில்.. "திராவிடத்தின் முப்பெரும் தலைவர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கொள்கை வழி தோன்றலான நமது தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களின் "எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்ததாக வேண்டும்" என்ற திராவிட கோட்பாட்டின் படி, "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் விளையாட்டு துறையை மேம்படுத்த புதிய அறக்கட்டளை; முதல்வர் தொடங்கி வைத்தார்

நாளை செப்டம்பர் 17ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியான பள்ளிகொண்டா பகுதியில், காடனேரி பைபாஸ் சாலை அருகில் முப்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடக்கு உள்ளது. அந்த விழாவில் "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செயலியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுகிறார். 

அனைவருக்கும் அனைத்தையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரறிஞர் அண்ணாவின் குறிக்கோளின்படி மக்களுக்காக கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் பொதுமக்கள் இந்த செயலியின் மூலம் ஒரே நிமிடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் இதன் சிறப்பு அம்சம். 

இந்த செயலியின் ஒரு பிரிவில் "உங்கள் திட்டம்" என்ற போத்தான் உள்ளது, அதில் பொதுமக்கள் பதிவு செய்யும் சுயவிவரத்தை பொருத்து அவர்களுக்கு எந்த திட்டம் பொருந்துமோ அந்த திட்டங்கள் சார்ந்த தகவல்கள் தன்னிச்சையாக இச்செயலில் வரும். மற்றும் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், பட்டதாரி இளைஞர்கள் என்று, யாருக்கு எந்த திட்டம் தேவை என்பதை எளிதாக அறியும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவருக்கும் ஏற்ற திட்டங்களை அமல்படுத்துவதில் மட்டுமின்றி, அதை கடைக்கோடி மக்களுக்கும் எளிமையான வழியில் கொண்டு சேர்ப்பது அரசின் கடமையாகும். அத்தகைய தொலைநோக்கு பார்வையோடும் அடிப்படை தேவை என்னவென்ற புனிதலோடும் வடிவமைக்கப்பட்டதே "மக்களுடன் ஸ்டாலின்" என்ற செயலி" என்று அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே பிரபல ரவுடி போலீசாரால் சுட்டுக்கொலை.. என்கவுண்டர் சம்பவத்தால் பரபரப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios