சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே ஆய்வு காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம். தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது பாதையில் ஆய்வு நடைபெற உள்ள நிலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரயில் சேவையில் மாற்றம்:
* திருச்செந்தூரில் இருந்து நாளை இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் ரயில் தாம்பரம் - எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து.
* புதுச்சேரி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் செங்கல்பட்டு - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
* திருவண்ணாமலை - தாம்பரத்துக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்படும் மெமு பாசஞ்சர் ரயில் கடற்கரை - தாம்பரம் இடையே பகுதி ரத்து.
* காரைக்குடி - சென்னை எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு புறப்படும் பல்லவன் விரைவு ரயில் தாம்பரம் - சென்னை எழும்பூர் இடையே பகுதி ரத்து
* திருநெல்வேலி - எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி காலை 6.05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் மாம்பலம் - எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுள்ளது.
* மதுரை - எழும்பூருக்கு மார்ச் 9-ம் தேதி காலை 6.45 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயில் தாம்பரம் - எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து.
* சென்னை எழும்பூர் - குருவாயூருக்கு மார்ச் 9-ம் தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட வேண்டிய விரைவு ரயில் எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து அதேநாளில் காலை 10.50 மணிக்கு புறப்படும்.
* சென்னை எழும்பூர் - மதுரைக்கு மார்ச் 9-ம் தேதி மதியம் 1.45 மணிக்கு புறப்பட வேண்டிய வைகை விரைவு ரயில் எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு புறப்படும்.
* சென்னை எழும்பூர் - நெல்லைக்கு மார்ச் 9-ம் தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட வேண்டிய வந்தே பாரத் விரைவு ரயில் சென்னை எழும்பூர் - மாம்பலம் இடையே பகுதி ரத்து. இந்த ரயில் மாம்பலத்தில் இருந்து பிற்பகல் 2.55 மணிக்கு புறப்படும்.
* சென்னை எழும்பூர் - காரைக்குடிக்கு மார்ச் 9-ம் தேதி பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட வேண்டிய பல்லவன் விரைவு ரயில் எழும்பூர் - தாம்பரம் இடையே பகுதி ரத்து. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும்.
* சென்னை எழும்பூர் - திருச்செந்தூருக்கு மார்ச் 9-ம் தேதி மாலை 4.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படு
