தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கும் வகையில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தாமிர பரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கன்னடியான் கால்வாய் மற்றும் பிள்ளையார் ஓடை திட்டப்பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என மணிவண்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தாமிர பரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் வகையில் செயல்படுத்தப்படும் கன்னடியான் கால்வாய் மற்றும் பிள்ளையார் ஓடை திட்டப்பணிகளுக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் தாமிரபரணியில் கழிவு நீர் கலக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.