Asianet News TamilAsianet News Tamil

மன்னிப்பு கோரினார் நித்தி..! முடிவுக்கு வந்தது மதுரை ஆதீன விவகாரம்..!

madurai atheenam problem solved and nithi asked sorry
madurai atheenam problem solved and nithi asked sorry
Author
First Published Feb 6, 2018, 6:03 PM IST


மன்னிப்பு கோரினார் நித்தி..!

மதுரை ஆதீனத்தின் 293 ஆவது,மடாதிபதியாக உரிமை கோரி இருந்த நித்தியானந்தா,தற்போது தன்னுடைய மனுவை திரும்ப பெற்றது மட்டுமில்லாமல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு, மதுரை ஆதீனத்தின் 293 ஆவது மடாதிபதியாக தன்னை அறிவித்துகொண்டார் நித்யானந்தா...

ஆனால், தற்போதைய மடாதிபதி உயிரோடு இருக்கும் போது, எப்படி இளைய மடாதிபதி என தன்னை அறிவித்து கொள்ள முடியும் என எதிர்ப்பு தெரிவித்து, ஜெகதலபிரதாபன் என்பவர் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.,

பின்னர் இதற்கு  நித்யானந்தா சார்பில்,தனது அறிவிப்பை நீக்க யாருக்கும் உரிமை இல்லை என  தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர்  நித்யானந்தாவின் இந்த அறிவிப்புக்கு தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்து  வந்தது.

பின்னர்  பல புகார்கள் தொடர்ந்து நித்யானந்தாவின் மீது சொல்லப்பட்டது. 

இந்நிலையில்,சென்ற விவாதத்தின் போது, இது குறித்து, பதில் மனுவை தாக்கல் செய்ய நித்யானந்தாவிற்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இல்லை என்றால், கோர்ட் அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்படும் என தெரிவிக்கப் பட்டு இருந்தது

இந்நிலையில்,இன்று பதில் மனுவை தாக்கல் செய்த  நித்யானந்தா,தன்னை மடாதிபதியாக  அறிவித்துகொண்ட மனுவை  திரும்ப பெறுவதாகவும், தன்னை இளைய மடாதிபதியாக  அறிவித்துகொண்டது  தவறு தான் என்றும் மனுவில் தெரிவித்து  இருந்தார்.

இவருடைய  மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,மதுரை ஆதினத்தில் நித்யாநந்தா நுழையக்கூடாது என பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதன் மூலம்  நீண்ட காலமாக  இழுபறியில் இருந்து  வந்த, மதுரை ஆதனம்  விவகாரம் தற்போது  ஒரு முடிவுக்கு வந்துள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios