மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு மருத்துவ வகுப்புகள் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு மருத்துவ வகுப்புகள் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் முதலில் விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. அதை தொடர்ந்து வரிசையாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவிகளுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கு உரிய கலந்தாய்வு நடைபெற்றது. அதன் பின்னர் பொது கலந்தாய்வு நடைபெற்றது. இந்த நிலையில் நடக்க இருக்கின்ற பருவத்தில் மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் வகுப்புகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வைத்தார். அங்கு இந்த ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதம் உள்ள 50 இடங்களுக்கான வசதிகள் அனைத்தும் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டிடம் கட்டும் வரை 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள் தற்காலிகமாக ராமநாதபுரத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் பயில தேர்வான மாணவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் வகுப்புகள் நடைபெற்றுகின்றன. மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியின் கட்டுமான பணி தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.