இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்த அமேசான்; மத்திய உள்துறைக்கு புகார் அனுப்பிய மதுரை வழக்கறிஞர்
இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து பொருட்களை விற்பனை செய்த அமேசான் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்த மதுரை வழக்கறிஞர் முத்துக்குமாரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான முத்துக்குமார், இவர் மத்திய உள்துறை, மத்திய தகவல்தொழில் நுட்ப துறை, வணிக தொழில்துறை, என். ஐ. ஏ, மற்றும் தமிழக தலைமை செயலாளர், டி. ஜி. பி ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.
தனுஷை ஒன்றும் செய்துவிடாதீர்கள்; ஏமாற்றிய காதலனுக்காக வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
அந்த மனுவில் அமேசான் சர்வதேச என்னும் வணிக நிறுவனம் தொடர்ந்து இந்து கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து, இந்து மத உணர்வுகளை சீர்க்குலைக்கும் விதமாக செயல்பட்டு வருவதால் அமேசான் நிறுவனதின் மீது உரிய சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.
அந்த மனுவானது மதுரை சைபர்கிரைம் காவல்துறையினருக்கு அனுப்பபட்ட நிலையில் இன்று புகார் தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மதுரை சைபர்கிரைம் காவல்துறையினர் சார்பில் சம்மன் அனுப்பபட்டது. இதையடுத்து வழக்கறிஞர் முத்துக்குமார் மதுரை சைபர் கிரைம் காவல்துறை ஆய்வாளர் செல்வக்குமார் தலைமையிலான காவல்துறையினர் முத்துக்குமாரிடம் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பியதால் நிலத்தை இழந்த விவசாயி கதறல்
அப்போது தனது குற்றச்சாட்டு் தொடர்பாக அமேசான் நிறுவனம் பற்றிய பல்வேறு ஆதாரங்களையும் ஆவணங்களையும் வழக்கறிஞர் முத்துக்குமார் தாக்கல் செய்தார். அமேசான் நிறுவனம் இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பாக Boycott அமேசான் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டான நிலையில் அமேசான் நிறுவனத்தின் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டு சர்ச்சைக்குரிய பொருட்கள் விற்பனை நிறுத்தப்பட்டது குறிப்பிடதக்கது.
அமேசான் நிறுவனத்திற்கு எதிரான புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.