அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பியதால் நிலத்தை இழந்த விவசாயி கதறல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசால் தள்ளுபடி செய்யப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் 9.5 ஏக்கர் நிலத்தை இழந்த விவசாயி கத்தை கத்தையாக பணத்துடன் ஆட்சியர் அலுவலகம் வந்து நீதி கேட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதி சேர்ந்தவர் சிசில். இவருக்கு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தில் 9.5 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார். விவசாயம் செய்வதற்காக கடனுக்காக ஒன்பது ஏக்கர் நிலத்தை திசையன்விளையில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2005ம் ஆண்டு அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். கடனுக்கான தொகையில் ரூபாய் 50 ஆயிரம் மட்டுமே செலுத்தியதாக கூறப்படுகிறது.
கடன் தவணை காலாவதியாகிய நிலையில் அதற்கான அறிவிப்பு வங்கி மூலம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரூபாய் 2 லட்சத்தை மீண்டும் வங்கி கணக்கில் செலுத்தியதாக தெரிகிறது. ஆனால் மீதமுள்ள தொகையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதன் காரணமாக வங்கியின் மூலம் நிலத்தை ஏலம் விடுவதற்கான அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.
மக்களே உஷார் !! இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை.. 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
தேர்தல் வாக்குறுதிகளாக விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என அரசியல் கட்சிகள் தெரிவித்ததை நம்பி தனது கடனும் தள்ளுபடி ஆகிவிடும் என நம்பியுள்ளார். ஆனால் இவருக்கு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை தாமதமாக உணர்ந்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து வங்கியை அணுகி கடனை திருப்பி செலுத்துவதற்கு ஏதாவது சலுகை வழங்க சிசில் தரப்பில் கேட்கபட்டது.
இதனைத் தொடர்ந்து வட்டியை தவிர்த்து அசல் தொகையை கட்ட வங்கி தரப்பில் செலுத்த சொல்லியதாகவும், ஆனால் அதனை திருப்பி செலுத்த சென்றபோது மண்டல அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் அலை கழித்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 7 லட்சம் ரொக்கத்துடன் முறையிட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் பாதுகாப்புடன் சென்று விவசாயி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் அளித்தார்.
இந்த நிலையில் வங்கி தரப்பில் விவசாயி பெற்ற கடனுக்கு வட்டி முதல் அனைத்தும் சேர்த்து ரூபாய் 66 லட்சம் கட்ட வேண்டி உள்ளதாகவும் ஏராளமான கால அவகாசம் வழங்கப்பட்டும் அவர் பணத்தை திருப்பி செலுத்துவதற்கான முயற்சி எடுக்கவில்லை. எனவே இதனை தொடர்ந்து நிலம் ஏலம் விடப்பட்டு ஏலம் எடுத்தவரிடம் முதல் தவணை ரூபாய் 30 லட்சம் பெறபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன்னர் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அரசியல் கட்சிகளின் வாக்குறுதியை நம்பி விவசாயி ஒருவர் தனது நிலத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.