தீபாவளிக்கு எத்தனை சிறப்பு பேருந்து.? எங்கிருந்து இயக்கப்படுகிறது..? முன்பதிவு தொடங்கியதா..? சிவசங்கர் தகவல்
தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக 16ஆயிரத்து 888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக
போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை- சிறப்பு பேருந்து
தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளோடு அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவிழா காலங்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல எதுவாக சென்னையிலிருந்து 10ஆயிரத்து 518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு நாளும் தினசரி இயக்கும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 4218 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
21, 22 ,23 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து மட்டும் மொத்தம் 10,518 சிறப்பு பேருந்துகளும் பிற ஊர்களிலிருந்து 6,370 பேருந்துகள் என மொத்தம் 16,888 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மாதவரம் , கேகே நகர் , தாம்பரம் மெப்ஸ் , தாம்பரம் ரயில் நிலைய நிறுத்தம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு ஆகிய நிறுதங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படும். இதுவரை 38,000 பேர் சென்னையிலிருந்து பிற பகுதிக்கு செல்ல முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் பிற ஊர்களிலிருந்து சென்னை வருவதற்கு 18,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக கூறினார்.
ஆம்னி பேருந்து- கூடுதல் கட்டணம்
அதேபோல் தீபாவளி பண்டிகை முடிந்து 24 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை பிற பகுதிகளிலிருந்து சென்னை வர 13,152 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முன்பதிவு பொறுத்தவரையில் கோயம்பேடு, தாம்பரம் மெப்ஸ், உள்ளிட்ட இடங்களில் முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்தார். அதேபோல் TNSETC செயலி வாயிலாக இணையதள , வாயிலாகவும், டிக்கெட் புக் செய்யலாம் என கூறினார். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800 425 6151 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம்,
ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். 21ம் தேதி முதல் 26 தேதி வரை சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு 24 மணிநேரமும் மாநகர இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும். 500 பேருந்துகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 2000 பேருந்துகளில் காமிராக்கள் பொறுத்தும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்