பாஜகவைச் சுமந்து செல்ல அதிமுகவினர் பாவம் செய்திருக்கிறார்களா? பாஜகவைக் காலுன்ற வைக்க அதிமுகவினர் சுமந்து செல்ல மாட்டோம் என கடுமையாக விமர்சித்தார் அக்கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளரும் மக்களவைத் துணைத் தலைவருமான தம்பிதுரை வெறித்தனமாக உரையாற்றினார்.

இதற்க்கு முன்பு பிஜேபியோடு கூட்டணி வைத்தால் பேரழிவை உண்டாக்கும். தனித்துப் போட்டியிடுவதே நல்லது' அதேபோல, பிஜேபியோடு நாம் சேர்ந்தால் கிறிஸ்துவ, முஸ்லிம் வாக்குகளை இழக்க நேரிடும். தைரியமாக அம்மா போல 40 தொகுதிகளிலும் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் நமக்கு மவுசு கூடும் என ஓபிஎஸ் ஏபிஎஸ் இருவருமே அடுத்த கட்டத்தில் யோசிக்க தொடங்கிவிட்டார்கள்.

தோப்பூரில் 1264 கோடி ரூபாய் செலவில் 750 படுக்கைகளுடன் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு 45 மாதங்களில் மதுரையில் எய்ம்ஸ் செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மதுரை அருகே தோப்பூரில் ரூ.1264 கோடி மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான  ஆரம்பகட்ட முடிவடைந்துள்ள நிலையில் திட்டங்களை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா வருகிற 27-ந் தேதி பகல் 12 மணி அளவில் நடைபெற உள்ளது. பிரதமர் மோடி பங்கேற்று எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிக்கான அடிக்கல் நாட்டுகிறார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மதுரைக்கு மோடி வரவுள்ள நிலையில், மதுரையில் அதிமுகவினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட நிதி ஒதுக்கிய குஜராத் காமராஜர், டெல்லி எம்.ஜி.ஆர் மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும். தமிழகத்திற்கு ரைம்ஸ் மருத்துவமனை பெற்றுத்தந்த தமிழக முதல்வரும் கழக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி.கே.பழனிசாமியும், துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் நன்றி என போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

ஒருபக்கம், பிஜேபியுடன் கூட்டணியும் இல்லை, அவங்களை சுமக்கமுடியாது என கிடைக்கிற கேப்பில் கிழித்தெறிந்து அதகளம் பண்ணும் அதிமுக தலைகள் கெத்து காட்டிவரும் நிலையில் மதுரை நிர்வாகிகளே மோடியை தாறுமாறாக வாழ்த்து போஸ்டர் ஒட்டியுள்ளது  மதுரை மக்களை மண்டை காய விட்டுள்ளது.