அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளை வழங்குகிறது
சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டது. அதன்படி, அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இருமுறை தள்ளுபடி செய்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதயமுள்ள அனைவரும் கலங்குகின்றனர் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
அந்த மனுவில், தனது உடல் நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீதான இன்றைய விசாரணையின்போது, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், அதனால் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெறுவதற்கு உரிமை உண்டு என செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஜாமீன் பெற உடல்நிலையை காரணம் காட்டி செந்தில் பாலாஜி தந்திரம் செய்வதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.
இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்திருந்தது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நாளை வழங்கப்படவுள்ளது. நாளை காலை 10:30 மணி அளவில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
