தேர்தல் வருவதால் உள்நோக்கத்தோடு தீய சக்திகள் செயல்பட வாய்ப்பு.! கலெக்டர், எஸ்பியை அலர்ட் செய்த ஸ்டாலின்
உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் சமூக ஊடகங்களை கண்காணித்து சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

குழப்பம் ஏற்படுத்த திட்டம்
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் தலைமையிலான இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், இந்த இரண்டு நாள் மாநாட்டில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மக்கள் நலனை மையமாகக் கொண்டு ஆலோசனைகளை அரசுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்துவது முதலாவது இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும், இரண்டாவது பொது அமைதியை கொடுப்பவர்களை முழுமையாக தடுக்க வேண்டும் என தெரிவித்தார். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று நினைப்பவர்களுக்கு இடம் ஏற்படுத்தி விடக்கூடாது என தெரிவித்தார்.
உள்நோக்கத்தோடு தீய சக்திகள்
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் இத்தகைய உள்நோக்கோடு சில சக்திகள் செயல்பட வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம் போதை பொருள் புழக்கம் ஆகியவற்றை கண்டுபிடித்து அறவே ஒலிக்க வேண்டும். இது எதிர்கால தலைமுறையை சீரழிக்கிறது. எனவே இவற்றை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்தார். சாலை விபத்துகளில் அதிகம் உயிரிழப்பு ஏற்படக்கூடிய மாநிலங்கள் ஒன்றாக தமிழகம் இருப்பது தனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய விபத்துகளை குறைக்க நெடுஞ்சாலை துறை காவல் துறை போக்குவரத்து துறை ஆகியவை ஒன்றிணைந்து திட்டங்களை வகுத்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்களுக்கு எதிரான குற்றம்
சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் செயல் திட்டங்களை வகுக்க வேண்டும் என தெரிவித்தார். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் சிறிதும் சமரசம் மேற்கொள்ளாமல் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தருவதில் முனைப்பு காட்ட வேண்டும். பட்டியலின மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தடுக்கும் வகையில் அந்த இன மக்கள் மாவட்ட ஆட்சியர்களை எளிதில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கக் கூடிய வகையில் பிரத்தியோக எண் மற்றும் வாட்ஸப் குழுக்களை உருவாக்க வேண்டும்.
சமூக வலைதளத்தில் போலி செய்தி
தற்போதைய காலங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் சமூக ஊடகங்களை கண்காணித்து சமூக ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர் மீது நடவடிக்கை எடுத்தும் உண்மையான தகவல்களை சமூக வலைதளத்தில் வெளியிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் அரசின் திட்டங்கள் கடைகோடி மக்களையும் சென்றடைய கூடிய வகையில் ஆக்கவபூர்வமான ஆலோசனைகளை வழங்குங்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்
அதிமுகவுடன் கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காகவே பேசி வருகிறோம்.. நல்ல முடிவு வரும்- வி.பி.துரைசாமி