173 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கத்தை தொடர்ந்து லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!
கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது. அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்து கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கோவையில் உள்ள லாட்டரி அதிபர் மாரட்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் லாட்டரி விற்பனை சட்டவிதிகளுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது. லாட்டரி விற்பனையில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின் முக்கிய பங்கு வகித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மார்டின் ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மார்ட்டின் குரூப் ஆப் கம்பெனிஸ் அண்டு இன்ஸ்ட்டியூசன் என்ற பெயரில் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- எங்க கிட்ட ஆதாரம் இருக்கு! செந்தில் பாலாஜியை தொடர்ந்து அமலாக்கத்துறை பிடியில் மற்றொரு அமைச்சர்.!
இந்நிலையில், கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததன் காரணமாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
சமீபத்தில் லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மகன், மருமகன் ஆகிய மூன்று பேரின் அலுவலகங்களில் அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை நடத்திய பிறகு அவருக்கு சொந்தமான 173 கோடி ரூபாய் மதிப்பிலான, சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.