தேர்தல் பத்திர விவகாரம்.. திமுகவிற்கு 509 கோடி வழங்கிய லாட்டரி மார்ட்டின் - வெளியான லேட்டஸ்ட் தகவல்!
Lottery Martin : தேர்தல் பத்திரங்கள் இனி செல்லாது, அவற்றைப் பயன்படுத்தி இனி நன்கொடை எதுவும் வழங்க கூடாது என்று கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
உச்சநீதி மன்றம் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த மாதம் 15 ஆம் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை மற்றும், அக்கட்சிகளுக்கு அந்த நன்கொடைகளை வழங்கியவர்களுடைய விபரங்கள் உள்ளிட்டவற்றை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று எஸ்பிஐக்கு உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு ஒன்றை வெளியிட்டது.
அதுமட்டுமில்லாமல் எஸ்பிஐ வழங்குகின்ற அனைத்து தேர்தல் பத்திர விவரங்களையும், தனது இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையமும் முடிவு செய்தது. இதனை அடுத்து கடந்த 14 ஆம் தேதி எஸ்பிஐ வழங்கிய விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவின் லாட்டரி கிங் முதல் அதிக தேர்தல் நன்கொடை வழங்கியது வரை.. யார் இந்த லாட்டரி மார்டின்?
இந்த சூழலில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக பிரபலமானவர் தான் "லாட்டரி மார்ட்டின்" இவர் திமுகவிற்கு மட்டும் சுமார் 509 கோடியை தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கியுள்ளது தற்பொழுது தெரிய வந்துள்ளது. அதில் திமுகவிற்கு நன்கொடை வழங்கியவர்களில் அதிகபட்சமாக நன்கொடை வழங்கியது லாட்டரி மார்ட்டின் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மொத்தமாக திமுகவிற்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் 656 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதில் சுமார் 509 கோடியை Future Gaming and Hotel Services என்ற நிறுவனம் திமுகவிற்கு வழங்கியுள்ளது. அது மார்டினுக்கு சொந்தமான நிறுவனமாகும்.
பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிராமணம் செய்துவைக்க முடியாது: ஆளுநர் ஆர்.என்.ரவி