காவிரி ஆற்றில் தலைகுப்புற கவிழ்ந்த லாரி... 6 மணிநேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு!

கோவையில் இருந்து சரக்கு ஏற்றிச் சென்ற லாரி காவிரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவிரி ஆற்று பாலத்தில் லாரி வந்து கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்து 23-வது பக்கவாட்டு தூணை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. 

lorry sinking cauvery river; 6 hours struggle Recovery!

கோவையில் இருந்து சரக்கு ஏற்றிச் சென்ற லாரி காவிரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலை நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே காவிரி ஆற்று பாலத்தில் லாரி வந்து கொண்டிருந்த கட்டுப்பாட்டை இழந்து 23-வது பக்கவாட்டு தூணை உடைத்துக் கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது. இதில் பாலத்தின் கைப்பிடி சுவர் மட்டும் 40 அடி நீளத்திற்கு உடைந்தது. lorry sinking cauvery river; 6 hours struggle Recovery!

கர்நாடகாவில் பெய்த கனமழையால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் லாரி ஆற்றுக்குள் பாய்ந்த வேகத்தில் அப்படியே நீருக்குள் முழுவதுமாக மூழ்கியது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாலத்தில் ஏற்பட்டு உள்ள சேதத்தை ஆய்வு செய்தனர். பிறகு லாரியை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

lorry sinking cauvery river; 6 hours struggle Recovery!

அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு 40-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வந்தனர். மேலும் காவிரி கரையோரம் வசிக்கும் மீனவர்களின் உதவியை நாடினார்கள். மீனவர்கள் லாரி விழுந்த பகுதியில் மூழ்கினார்கள். ஆனால், ஆற்றில் நீரின் அழுத்தம் அதிகமாக இருந்ததால் அவர்களால் ஆற்றின் அடிப்பகுதி வரை செல்ல முடியவில்லை. நீரில் மூழ்கிய அவர்கள் எந்த ஊரு லாரி? என்பது குறித்தும், வண்டி எண்? குறித்தும் அடையாளம் கண்டனர். இந்த லாரி பூந்தமல்லியை சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மீட்க 2 பெரிய ராட்சத கிரேன்கள் வரவழைக்கப்பட்டு லாரியை மீட்டனர். இதனிடையே லாரியில் இருந்து ஓட்டுநர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios