லண்டன் சென்றுள்ள பாஜக தலைவர் அண்ணாமலைக்கு லண்டனில் வசிக்கும் தமிழர்கள் கொடுத்த வரவேற்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி பணிகளை கவனித்து வருகிறார். மேலும், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து வரும் மக்களவை தேர்தல் தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாஜக சாதனை விளக்க பொதுக்கட்ட ஏற்பாடுகள் மற்றும் அந்த கூட்டங்களுக்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் தேசிய பாஜக தலைவர்களை வரவழைப்பது போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். அவ்வப்போது அவர் அதிமுக பற்றியும் விமர்சித்தும் வருகிறார்.
இந்த நிலையில் அண்ணாமலை தற்போது 6 நாள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். இது முழுக்க முழுக்க கட்சி ரீதியான பயணம் என்றே கூறப்படுகிறது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கும், மத்திய பாஜக அரசின் சாதனைகளை கொண்டு செல்லவே அண்ணாமலை லண்டன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி லண்டனில் உள்ள தமிழர்களை சந்தித்து, மத்திய அரசின் 9 ஆண்டு சாதனைகளை விளக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி வழக்கு..! அதிரடி உத்தரவிட்ட நீதிபதி
இந்த நிலையில் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் லண்டன் பயணம் குறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “இங்கிலாந்தில் உள்ள சைவக் கோயில்களின் கூட்டமைப்பு இந்து சமயப் பணிகளுக்குச் சேவை செய்து வருகிறது, மேலும் இங்கிலாந்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்களை பல ஆண்டுகளாக நிர்வகித்தும், பராமரித்தும் வருகிறது.
அந்த கூட்டமைப்பின் பிரமுகர்கள், நமது பிரதமர் மோடிக்கான பாராட்டுக் கடிதத்துடன் என்னை சந்தித்தனர். புதிய நாடாளுமன்றத்தின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக சைவ ஆதீனங்களைச் சேர்த்ததற்காகவும், சோழர்களுக்குப் பெருமை சேர்த்ததற்காகவும், செங்கோலை உரிய இடத்தில் நிறுவியதற்காகவும் நன்றி தெரிவித்தனர். உலகின் மிகப் பெரிய அரசியல் கட்சியின் தொண்டனராக, நமது மாண்புமிகு பிரதமர் மோடி, உலகின் ஒவ்வொரு சமூகத்தில் இருந்தும் பாராட்ட்டை பெறுவது பெருமையாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே லண்டனில் அண்ணாமலையை பார்த்த தமிழர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். இதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ள நபர் ஒருவர் அண்ணாமலைக்கு கிடைத்த அன்பை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவில் “நீங்கஎவ்ளோதான்சினிமாமோகத்தகாட்டிபணத்தாலயும்,கூவாட்டர், பிரியாணிகொடுத்துகூட்டம்கூட்டினாலும்நம்மபையனுஉரிமையோடுவந்துகட்டிஅணைக்கும்தாயின்அன்பைஎத்தனைவருசம்ஆனாலும்உங்களாவாங்கமுடியாது. இது தான் நேரம் இனிமே எல்லாம் மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பக்ரீத் பண்டிகை : சொந்த ஊருக்கு போறவங்களுக்கு சிறப்பு ரயில்.. குட்நியூஸ் சொன்ன தெற்கு ரயில்வே..
