Loksabha Election 2024 : மக்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இணைந்து இந்த தேர்தலை களம் காணவிருக்கிறது பாமக என்கின்ற அறிவிப்பு அண்மையில் வெளியானது.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ஏழு கட்டமாக இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தை துவங்கி உள்ளனர். 

இன்று திருச்சி சிறுகனூரில் தனது முதல் பிரச்சாரத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் துவங்கியுள்ள நிலையில், தொடர்ச்சியாக அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கவுள்ளனர். மேலும் 2 நாள் பயணமாக பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி அவர்கள், இந்தியா திரும்பியதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுப்பவுள்ளார். 

KOVAI : ஸ்டார் தொகுதியாகும் கோவை? அண்ணாமலை சாதிப்பாரா.? சறுக்குவாரா.? மும்முனைப் போட்டியால் களம் யாருக்கு.?

இந்நிலையில் தர்மபுரியில் பாமக சார்பாக இந்த மக்களவை தேர்தலில் களம் காணப்போவது யார் என்பது குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. பாமக வட்டாரங்கள் அளித்துள்ள தகவலின்படி, பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுடைய மனைவி சவுமியா அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் பாமக சார்பாக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே பாமக சார்பாக அரசாங்கம் என்பவர் தான் அங்கு போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்கட்சி தலைவர் அன்புமணி அவர்களின் மனைவி சவுமியா அங்கு போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

சூடுபிடித்த விருதுநகர் களம்; விஜயகாந்த் மகனை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் போட்டி..