நாடாளுமன்ற தேர்தல்.. சென்னையில் சூடுபிடிக்கும் வாக்குப்பதிவு.. செல்போனுடன் வருபவர்களுக்கு அனுமதி மறுப்பு!
Lok Sabha Election 2024 : நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கியுள்ளது. தமிழகத்தின் பல்வேரு பகுதிகளில் மக்கள் ஆர்வமாக வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு தற்பொழுது துவங்கி உள்ளது, காலை 9 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சுமார் 12.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக கள்ளக்குறிச்சி 15.10 சதவிகித வாக்குகளும், தர்மபுரியில் 15.04 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் தங்களுக்கு விருப்பமான தலைவர்களுக்கு வாக்களித்து வரும் நிலையில் சென்னையில் பல இடங்களில் தடையை மீறி தேர்தல் பூத்திற்குள் செல்போனோடு வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பதிவு செய்யப்படும் பூத்திற்குள் செல் போன் எடுத்த செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் அதனை மீறி பூத்திற்குள் செல் போன் எடுத்து சென்ற நிலையில் அவர்கள் வாக்களிக்க, தேர்தல் அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் செல் போனை வெளியில் உள்ளவர்களிடம் கொடுத்துவிட்டு வந்த பிறகே அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி மக்கள் பூத்திற்குள் செல் எடுத்துச்செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு துவங்கியுள்ளது. ஜூன் மாதம் வரை 7 கட்டமாக இந்த தேர்தல் வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளது. பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் அருந்திய பழச்சாற்றில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் முதல் கட்டமாக மக்களவைத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சகோ வெளியிட்ட அறிக்கையிலும், வாக்காளர்கள் வாக்குப்பதிவு பூத்திற்குள் செல் போன் எடுத்து செல்ல வேண்டாம் என்றும், வெளியே அவர்கள் selfie எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
ஃபர்ஸ்ட் டைம் அப்பா இல்லாமல் நாங்க ஓட்டு போட்போம்.. ரொம்ப கஷ்டமா இருக்கு.. விஜய் பிரபாகரன்!