local body elections will be held within july

உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் வழங்குமாறு மாநில தேர்தல் ஆணையம் வேண்டுகோள் உயர்நீதிமன்றத்தில் விடுத்துள்ளது. 

தமிழ்நாட்டில் உள்ள 12 மாநகராட்டிகள், 23 நகரசபைகள், 529 டவுன் பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்கான உள்ளாட்சித் தேர்தலை மே 14 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இதற்கிடையே இவ்வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அப்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய தேர்தல் ஆணையம், ஜூலை இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பதாக உறுதி அளித்தது.