Asianet News TamilAsianet News Tamil

ஏப்ரல் 24க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் - உயர்நீதிமன்றத்தில் வழக்கு

local body election should held on apr 24 - a new case in HC
local body-election-should-held-on-apr-24
Author
First Published Mar 13, 2017, 12:32 PM IST


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர் பாடம் நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆட்சி காலம் முடிவடைந்தது. இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், 

இடஒதுக்கீடு விவகாரத்தில் குளறுபடி இருப்பதாக திமுக சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலுக்கு இடைகால தடை விதித்தது. மேலும் திமுக அளித்துள்ள புகாருக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கான 

விளக்கம் தேர்தல் ஆணையம் சார்பில் கொடுக்கப்பட்டது. அதில், போதிய விளக்கம் இல்லை என கூறிய நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை நடத்த தடை உத்தரவை நீடித்தது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன், மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளை துவங்க 

அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், தமிழக அரசு அதற்கான வேலைகளில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், வரும் ஏப்ர்ல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட 

வேண்டும் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios